×

சென்னையில் கொலு பொம்மைகள் கண்காட்சி..அமைச்சர் த.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்...

சென்னை: இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பண்டிகை அனைவராலும், மிகவும் பக்தியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடப்படுவதாகும். தமிழ்நாட்டில் இல்விழா நவராத்திரி என்ற பெயரிலும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தசரா” என்ற பெயரிலும், மேற்கு வங்கத்திலும் வட இந்தியாவின் பிறப்பகுதிகளிலும் துர்கா பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பூம்புகார் என அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி. கழகம், கைவிளைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கமாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொது பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் கொலு பொம்மைகள் கண்காட்சி என்ற சிறப்பான கண்காட்சியிணை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டுகளைப் போன்றே கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை 06.10.2022 வரை ஞாயிறு உட்பட நடைபெற உள்ளது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை தர்மேந்திர பிரதாப் யாதவ் இஆம். அரசு முதன்மை செயலாளர். கைத்தறி கைத்திறன், துரிநூல் மற்றும் கதர்த்துறை சென்னை மற்றும் ஷோபனா வெ. இஆப. மேலாண் இயக்குநர், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம். சென்னை அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு த.மோ. அன்பரசன், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களால் இன்று துவக்கி வைத்துள்ளார். இந்த நவராத்திரி கொலு கண்காட்சியில் களிமண், காகிதகூழ். பளிங்குதுள், மரம். கொல்கத்தா களிமண், ஈடு களிமண் ஆகிய பொருட்களைக் கொண்டு கடவுள் மற்றும் தெய்வ உருவங்கள், விலங்குகளின் உருவங்கள் மற்றும் திருவிழா தொகுப்பு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு கொலு பொம்மைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் தசாவதாரம் செட் இராமாயண செட், அஷ்டலட்சுமி செட் விநாயகர், குபரேன், திருமலை, அறுபத்து மூவர் நாயன்மார்கள். திருப்பதி பிரம்ம உற்சவ செட் கிரிக்கெட் விளையாட்டு. சங்கீத மும்மூர்த்திகள், கார்த்திகை பெண்கள், அறுபடை முருகன் செட், கோப்பியர் நடனம் செட் கோவர்த்தனகிரி செட் ரூபாவீஸ்ரர் செட், காதணி செட், லஷ்மி சரஸ்வதி விநாகயர் செட் மாயாபஜார் செட், ராமாயாண செட் நிச்சயதார்த்தம் செட் திருமணம் செட், பிரகலாதன் செட், ராமர் பட்டயிளேடிகம் செட் சுனைகளப்பு செட் வரவேற்பு செட், வாசுதேவர் செட் போன்ற கருத்து சார்ந்த சிறப்பானதொரு கொலு பொம்மைகள் காட்சிக்கும் மற்றும் விற்பணைக்கும் வைக்கப்பட்டுள்ளது. கொலு பொம்மைகசோடு சேர்ந்து சிறப்பு அம்சமாக தமிழரின் வீரம்,வரலாறு, புகழ் போன்றவைகளை பற்றியும். தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு, விருந்தோம்பல், சமூக திருவிழாக்கள், மற்றும் நவீன காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் காகிதக்கூழ் பொம்மைகள், சுடுமண் பொம்மைகள் மற்றும் பல்வேறு வகையிலான கொலு பொம்மைகளும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கண்காட்சியில் இந்த வருடம் புதுவரவாக 6 அடி உயரத்தில் தமிழ்நாட்டின் பராம்பரியமான தலையாட்டி பொம்மை இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சியில் பலவித கொலு பொம்மைகளுடன் கூடுதலாக மேலும் பலவிதமான பரிசு பொருட்கள் மற்றும் புதுமையான கலைப்பொருட்கள் சந்தனமரப் பொருட்கள், வெண்மரப் பொருட்கள், நூக்கமரப் பொருட்கள், பித்தனை பொருட்கள், பித்தனை விளக்குகள், பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், ஓவியங்கள் மற்றும் பலவகையான கைவினைப்பொருட்கள், கண்கவரும் விதமாக பொதுமக்கள் பார்வைக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது மற்றும் அனைத்து வங்கி அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் இக்கண்காட்சி 06.10.2022 வரை ஞாயிறு உட்பட தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைப்பெற உள்ளது. இக்கண்காட்சியில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.85,000 மதிப்புள்ள கொலு பொம்மைகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Kolu Toys Exhibition ,Chennai ,Minister ,D. Moe Andarasan , Kolu Dolls Exhibition in Chennai..Minister Th.Mo. Anbarasan inaugurated...
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...